Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

குழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை

அனிருத் அடுத்ததாக குழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

 தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இணைந்துள்ள புது படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதன் பிறகு குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி வரும் அட்வென்ச்சர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

குழந்தைகள் மற்றும் புலிகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து காடுகளில் உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக கொடி, காக்கி சட்டை போன்ற படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தில் காடுகள் சார்ந்த காட்சிகள் இடம்பெற உள்ளதால் அதிக அளவு கிராபிக்ஸ் காட்சிகள் சேர்க்க உள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர்களாக விவேக், மெர்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ராக் ஸ்டார் அனிருத்தும் ஒரு பாடலுக்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் கேரளாவில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் வட இந்தியாவில் சில பகுதிகளிலும் நடத்த உள்ளனர்.

குழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை