Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தரமணி வசந்த் ரவியின் புதுப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் அனிருத்

தரமணி வசந்த் ரவியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் நாளை வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'தரமணி'. நடிகர் மற்றும் மருத்துவரான வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் பல விருதுகளையும் குவித்தது. இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களில் பணியாற்றியுள்ள வசந்த் ரவி, இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் மற்றும் ஜியோ பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு வசந்த் ரவி, புது முக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 5மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஆர்ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தற்புக சிவா இசையமைத்து வருகிறார். 

தரமணி வசந்த் ரவியின் புதுப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் அனிருத்