Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா !

இரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா !

சீயான் விக்ரம் பல படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்நிலையில் அவரின் மகன் த்ருவ் திரையுலகிற்கு அறிமுக படுத்துவதற்காக நல்ல படத்தினை எதிர்பார்த்து கொண்டிருந்த விக்ரம், விரும்புவதற்கு தகுந்தவாறு தெலுங்கில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் முடிவினை எடுத்திருந்தார்.     

முன்னணி இயக்குனர் பாலா அர்ஜுன் ரெட்டி படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மகேஷ் மஹதாஸ் e4e எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.   

இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. வெள்ளை நிறத்தில் புகைப்படம், சிவப்பு நிறத்தில் வர்மா என்ற படத்தின் தலைப்பு வித்தியாசமான கவர்ச்சியை கொடுத்துள்ளது. வெளியிட்ட இரண்டு மணி நேரத்திலேயே 15,000 லைக் பெற்றுள்ளது. இதம் மூலம் படத்தினை பற்றிய ஆர்வங்களும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.       

இரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா !