Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் புது ட்ரைலர்

sollividava official trailer release

'ஆக்சன் கிங்' அர்ஜுன் தயாரித்து இயக்கிவரும் 'சொல்லிவிடவா' படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கன்னட திரைப்பட நாயகன் சந்திரன் குமார் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்திரன் குமார் தொலைக்காட்சி நிலையத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கிடையில் நடைபெறும் காதலுடன் கூடிய சண்டை காட்சிகள் மற்றும் படத்தில் இணைந்துள்ள சதிஷ், யோகி பாபு காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின்  முக்கிய வேடத்தில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன் இணைத்துள்ளார்.   

தற்பொழுது இயக்குனர் அட்லீ இப்படத்தின் ஒரு புது ட்ரைலரை வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரில் பல அதிரடி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  காதலுடன் கலந்த காமெடியுடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஒரு கட்டத்தில் நம் நாட்டை காப்பாற்றும் இராணுவ வீரர்கள் ஈடுபடும் சாகசத்தை நேரடியாக ஒளிப்பதிவு செய்ய ஐஸ்வர்யா மற்றும் சந்திரன் குமார் பத்திரிகையாளராக செல்கிறார்களாம். அதன் பின்னர் படத்தில் விறுவிறுப்பான பல காட்சிகள் துவங்கவிருப்பதாக படக்குழு தெவித்துள்ளது. இந்த சாகசத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற அதிரடி காட்சிகள் மற்ற படத்தில் இடம் பெறுவதை விட புது விதத்தில் கையாண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளியான போஸ்டர், டீசர், ஜெயம் ரவி வெளியிட்ட பாடல் வீடியோ, ட்ரைலர் போன்றவை ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.    

   

 

அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் புது ட்ரைலர்