Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது அருண் விஜய் தடம் படத்தின் த்ரில்லர் ட்ரைலர்

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான தடம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'மீகாமன்' படத்திற்கு பிறகு அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'தடம்'. முன்னதாக 'தடையற தாக்க' படத்தின் மூலம் இணைந்த இயக்குனர் மகிழ் திருமேனி, அருண் விஜய் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக 'தடம்' படத்தின் மூலம் இணைந்துள்ளது. த்ரில்லர் படமான இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா போப் நடித்துள்ளார்.

இவர்களுடன் வித்யா பிரதீப், விஜயன், ஜோகி பாபு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளது. குற்றவியல் சார்ந்த இந்த படத்தின் ட்ரைலர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

காதல் கலந்த த்ரில்லர் படமான இந்த படத்திற்கு அருண் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு பணியை அமைத்துள்ள இந்த படத்தினை தயாரிப்பாளர் இந்தீர் குமார் தயாரித்துள்ளார். மேலும் தணிக்கை குழு இந்த படத்திற்கு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

வெளியானது அருண் விஜய் தடம் படத்தின் த்ரில்லர் ட்ரைலர்