Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இறுதி கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய்யின் தடம்

arun vijay upcoming movie thadam shooting updates

இந்திய திரைப்பட நடிகரான அருண் விஜய் பின்னணி பாடகர் மற்றும் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் போன்ற திறமைகளை கொண்டவர். இவர் திரையுலகில் 'முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த குடும்ப படமான 'பாண்டவர் பூமி'  ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் கெட்டப்பில் நடித்து மக்களிடையே வெகுவான வரவேற்பினை பெற்றதோடு 'குற்றம் 23' படத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.   

இந்த வெற்றி படங்களை தொடர்ந்து அருண் விஜய் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக 'தடையற தாக்க' படத்தில் இவர்களது கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில் அருண் விஜய் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக இரண்டு வேடத்தை கையாண்டுள்ள அருண் விஜய், காவல் துறை அதிகாரியாகவும், வில்லன் கெட்டப்பிலும் களமிறங்கியுள்ளார். படத்தின் டைட்டிலை போன்று, ஒரு கொலை செய்துள்ள குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளும் வழியை ( தடம் ) மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரியான அருண் விஜய் வில்லனை கண்டு பிடிப்பதற்கு மேற்கொள்ளும் பல வழிகளை அதிரடியாக இயக்குனர் மகிழ் திருமேனி காண்பித்துள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் இறுதி கட்டமாக பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்ததோடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் மக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு வருகின்றனர்.         

இறுதி கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய்யின் தடம்