'அவதார்' படத்தின் அடுத்தடுத்த அவதாரங்கள்
விக்னேஷ் (Author) Published Date : Dec 01, 2017 13:40 ISTபொழுதுபோக்கு
ஜேம்ஸ் கேமரன், புகழ்பெற்ற ஆங்கில திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் மிகவும் பிரபலமான படங்களான டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, ராம்போ, டைட்டானிக், அவதார் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் மார்ச் 26, 2012 -இல் உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா ட்ரென்ச்சின் 11 கி.மீ ஆழத்திற்கு சென்று திரும்பி சாதனை படைத்தவர். இவர் இயக்கிய 'டைட்டானிக்' ஆங்கில திரைப்படம் 1997-இல் வெளிவந்து வசூலில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டி சாதனை படைத்தது.
இதனை அடுத்து இவர் இயக்கிய 'அவதார்' திரைப்படம் 2009-இல் வெளிவந்தது. சுமார் 1500 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முன்பு சாதனை படைத்த டைட்டானிக் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அவதார் படத்தினை தொடர்ந்து அவதார் 2, 3, 4, 5 என அடுத்தடுத்து பாகங்களை இயக்க இருப்பதாக ஜேம்ஸ் கேமரன் தெரிவித்திருந்தார். தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாரித்து வருகிறார். இந்த படத்தை 2020-இல் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அவதார் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் கடலுக்கடியில் படமாக்க படுவதால் சிரமமாக இருப்பதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் தெரிவித்துள்ளார். மேலும் அவதார் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வசூலில் நல்ல சாதனை படைத்தால் மட்டுமே நான்கு மற்றும் ஐந்தாம் பாகங்களை இயக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவதார் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.