Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழ்ராக்கர்ஸ் அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திருட்டு பதிவை வெளியிட்டு அதிர்ச்சி

Avengers Endgame: Tamilrockers leaked online before Release date

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியா மற்றும் சில நாடுகளில் வெளியாக இருக்கிறது. பெரும்பாலான திரையரங்குகள் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவை ஆரம்பித்த நிலையில், இன்று அனைத்து திரையரங்குகளும் முன்பதிவை தொடங்கிவிட்டது.

2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சிலர் இந்த படம் பெரும்பகுதி இருட்டில் இருப்பதால், 2டி யில் - 3டி கண்ணாடி இல்லாமல் பார்ப்பது நல்லாயிருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் மக்கள் பெருமளவு 3டி தொழில்நுட்பத்தில் பார்த்த படம் எந்திரன் 2.O .

இவ்வாறு முன்பதிவு மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த படத்திற்கு மற்ற ஒரு சோதனையாக இருப்பது இணையத்தில் வெளியாகும் திருட்டு பதிவுதான். தமிழ் படங்கள் பெரும்பாலும் இணையத்தில் வெளியாகும் திருட்டுப்பதிவினால் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அவென்ஜ்ர்ஸ் போன்ற பெரிய படங்கள் உலகளவில் ரிலீஸ் ஆவதால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு குறைவு ஆனால் இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ரிலீஸ் ஆக இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் ஆங்கில மொழி திருட்டு பதிவை இவர்களது இணையத்தில் வெளியிட்டுள்ளது. பெரிய திரையில் பார்க்க விரும்பும் மக்கள் இணையத்தை கண்டுகொள்ளமாட்டார்கள் இருந்தாலும், இவ்வாறு திருட்டு பதிவை இணையத்தில் வெளியாவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொண்டாலும், இணையத்தில் வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை ஒதுக்கி திரையரங்கில் படங்களை பார்க்க வேண்டும்.

தமிழ்ராக்கர்ஸ் அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திருட்டு பதிவை வெளியிட்டு அதிர்ச்சி