மெர்சல் திரைப்படம் லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் வெற்றி
ராசு (Author) Published Date : Mar 29, 2018 23:12 ISTபொழுதுபோக்கு
இளையதளபதி நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் பெரிய எதிர்பார்புடன் வெளிவந்து மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது, சில சர்ச்சைகள் இப்படத்தை அதிக அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்தது குறிப்பிடதக்கது. தொடர்ந்து பல நாள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றியை தழுவியது. மெர்சல் திரைப்படம் இயக்குனர் அட்லீக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் இரண்டாவது படம், இரண்டுமே வெற்றி படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்தது, பாதுகாப்பான விலையில் வாங்கியவர்களுக்கும் லாபம் கிடைத்தது.
நடிகர் விஜய் அவர்களின் மெர்சல் போஸ்டர் ஒன்று பாடபுத்தகத்திலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டனில் நான்கு வருடமாக நடக்கும் தேசிய திரைப்பட விருது விழாவில் வெளிநாட்டின் சிறந்த படத்திற்கான போட்டியில் மெர்சல் திரைப்படம் இடம்பெற்றது. இவ்விழாவில் வெற்றிபெற ஆன்லைனில் ஓட்டு பதிவு நடத்தப்பட்டது, அணைத்து நாட்டு மக்களும் அவரவர் நாட்டு திரைப்படத்தை வெற்றி பெற தங்களது ஓட்டுகளை லண்டன் தேசிய திரைப்பட அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்னதாகவே இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் இணையத்தில் இந்த விருது பற்றிய செய்திகளை பகிந்தனர், இதற்கு பெரும் ஆதரவு கிடைத்து இன்று லண்டன் தேசிய விருதில் பங்கேற்ற மெர்சல் திரைப்படம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அவர்களது இணையத்தளத்தில் வெளியிட்டனர். இதில் பங்குபெற்ற மற்ற நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, சவுத் ஆப்பிரிக்கா, லெபனான், ஜெர்மனி விட மெர்சல் திரைப்படம் அதிக வாக்குகளால் வெற்றி பெற்றது.