Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ட்ரைலர் வெளியீடு

bhaskar oru rascal

சித்திக் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கும் இப்படத்தில் மாஸ்டர் ராகவன், நடிகர் சித்திக், 'தெறி' புகழ் பேபி நானிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து  அம்ரேஷ் கணேஷ் இசையில் இன்று வெளிவந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.    

இந்நிலையில் படத்தின் அதிகார பூர்வமான தகவலை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் ட்ரைலரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் 2015ம் ஆண்டு மலையாள திரையுலகில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற தலைப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தையும் சித்திக் இயக்கியிருக்கிறார். இதில் மலையாள முன்னனி நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து நயன்தாரா, ஜே.டி.சக்ரவர்த்தி, சனூப் சந்தோஷ், பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ட்ரைலர் வெளியீடு