பிக்பாஸ் ரொம்ப மொக்கையா போகுது பிக்பாஸ்
ராசு (Author) Published Date : Aug 16, 2018 16:54 ISTபொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 60வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று சுதந்திர தினம் என்பதால் வித்தியாசமான ரணகளத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றும் சுதந்திரம் என்பதையே மறந்து விட்ட போட்டியாளர்கள், பொம்மை செய்து பணத்தை சம்பாதிப்பதில் தீவிரமாக இருந்தனர். வழக்கம் போல பிக்பாஸ், ஒரு டாஸ்க் கொடுத்து இரு அணிகளாக பிரித்து அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டது.
அதற்கேற்ப மகத், தேனி, ஐஸ்வர்யா, சென்ட்ராயன், பாலாஜி ஆகியோருக்கிடையில் கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றது. இதனையும் ரசிகர்கள் வழக்கம்போல ஆர்வமாக கண்டுகளித்தனர். பிறகு இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் சத்தம் அதிகமாகியுள்ளது. இது தவிர டாஸ்க் முடிந்தவுடன், யாரு பேஸ்ட் போட்டியாளர் படத்திற்காக மகத் மற்றும் மும்தாஜுக்கும் இடையே கடும் வாக்கு வாதங்களும் நடைபெறுகிறது.
இதனால் தற்போது ரசிகர்கள் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் ப்ரோமோ மட்டும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியாக வருகிறது. நிகழ்ச்சியை பார்த்தால் மொக்கையாக உள்ளது. இதனால் நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு போரடித்து கொண்டிருக்கிறது.