Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தாடி பாலாஜியையும் நித்யாவையும் ஒன்று சேர்க்க போராடும் சக போட்டியாளர்கள்

நேற்று நடந்த வெங்காய பிரச்சனையில் தாடி பாலாஜிக்கு, அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகியுள்ளது.

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் சுவாரஸ்யமாக கணவர், மனைவியான தாடி பாலாஜி மற்றும் நித்யா ஆகியோரை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது விவாகரத்து அளவிற்கு சென்றுள்ளது. இந்நிலையில் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் கணவர், மனைவியான இருவருக்கும் இடையில் பிரச்சனை இருப்பதை அறிந்து சக போட்டியாளர்களும் அவர்களை ஒன்று சேர்க்க போராடி வருகின்றனர். ஆனால் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் பிடிவாதத்தினால் மூன்றாம் நாளே சக போட்டியாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமைதியாக ஜாலியாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டையும்  ரகளையுமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது தாடி பாலாஜிக்கு போட்டியாளர்களிடமிருந்து அட்வைஸாக குவிந்து வருகிறது. இது தவிர இன்று விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் சென்றாயன் மீது அனைவரும் கடுப்பாக இருப்பது போன்று வெளியிட்டுள்ளனர். இதனால் மும்தாஜுக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

தாடி பாலாஜியையும் நித்யாவையும் ஒன்று சேர்க்க போராடும் சக போட்டியாளர்கள்