வெளியே வந்த முதல் நாளே காதலியை கரம் பிடித்த டேனியல்
மோகன்ராஜ் (Author) Published Date : Sep 03, 2018 15:15 ISTபொழுதுபோக்கு
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏவிக்சன் மூலமாக டேனியல் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். நேற்று ஜனனி வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று ட்வீஸ்ட்டாக டேனியல் வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு தற்போது 8பேர் மட்டுமே இருக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். டேனி வெளியே வந்த பிறகு தன்னுடைய அனுபவம் குறித்து பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கும் போது இருந்த டேனிக்கும், வெளியே வந்துள்ள டேனிக்கும் நிறைய மாறுதல் உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்த 78 நாட்களில் ஆறுதலுக்காக சில முகங்கள் வந்தனர். ஆனால் சில முகங்கள் கூடவே இருந்து தற்போது துரோகியாக இருக்கின்றனர். நான் வெளியே வந்த பிறகு நிறைய முகங்கள் பார்க்க வேண்டும், நண்பர்களை பார்க்க வேண்டும், குடும்பத்துடன் இருக்க வேண்டும். இந்த பிக்பாஸ் வீடு நிறைய விஷயங்களை கற்று கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய காதலியான டெனிஷாவை வெளியே வந்த அடுத்த நாளே கரம் பிடித்துள்ளார்.
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த அவருக்கு தன்னுடைய காதலி தான் குடும்பத்திற்கு ஆதரவாக தற்போது வரையிலும் துணை நிற்பதாக பிக்பாஸ் வீட்டில் தெரிவித்திருந்தார். 78 நாட்களாக அவரை விட்டு பிரிந்து தவித்து அவர் வெளியே வந்தவுடன் முதல் வேலையாக அவரை திருமணம் செய்துள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.