Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விமலுடன் இணையும் பிக் பாஸ் ஜூலி

julie joined in mannar vagaiyara movie

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலுக்கு சொந்தமான அரசு ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விமல் தயாரித்து நடித்துவரும் 'மன்னர் வகையறா' படத்தில் ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து  பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி என திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தில் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி விமலுடன் இணைந்து ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பதாக தெரிகிறது. அதில் ஜூலி மணமகள் பெண் போன்று அலங்கரித்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வரை குறும்படத்தில் மட்டும் நடித்திருந்த ஜூலி 'மன்னர் வகையறா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் கலா மாஸ்டர் மூலம் கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிட்ட தக்கது.  

விமலுடன் இணையும் பிக் பாஸ் ஜூலி