Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிக் பாஸ் வீட்டில் தனது ஆளுமை தனத்தை முயற்சிக்கும் ரேகா

பிக் பாஸ் வீட்டில் தனது ஆளுமையை தனத்தை முயற்சிக்கும் ரேகா

பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை, கூச்சல், கலவரம் மற்றும் காதல் போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்புடையது.  பொதுவாக மற்றவர்கள் சண்டையிடுவதைப் பார்ப்பது பார்வையாளர்களுக்கு பெரிய பொழுதுபோக்கு. கடந்த சீசனில் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றினர், அதே வீட்டினுள் காதலும் தலைவிரித்து ஆடியது.

இந்த முறை வயதான போட்டியாளராக நடிகை ரேகா வந்துள்ளார். பொதுவாக வயதானவர்கள் உள்ளே அனுமதிக்க காரணம் , இவர்கள் மற்றவர்களுக்கு தங்களது அனுபவங்களை பகிர்வார்கள், ஆனால் இங்கு நடப்பதோ வேறு.

முதல் நாளில், நடிகை ரேகா தனது சக போட்டியாளர்களிடம் தனது பொருட்களை தேவையற்ற முறையில் தொடக்கூடாது என்று முதலில் துவக்கிவைத்துள்ளார். முதல் போட்டியாளராக ரியோ வீட்டிற்குள் நுழைந்தார், அவருக்குப் பிறகு, தர்ஷனின் முன்னாள் காதலி சனம் அவருடன் சேர்ந்து கொண்டார்.

மூன்றாவது, புன்னகை மன்னன் கதாநாயகி ரேகா உள்ளே வந்தார். உள்ளே நுழைந்ததும், சனம் புன்னகையுடன் வரவேற்றாலும் இவர் பதிலுக்கு புன்னகைக்கவில்லை.

முதல் நாளே தனக்கு பிடித்த இடத்தில தனது படுக்கையை முடிவு செய்துகொண்டு, தான் ஒரு சீனியர் நடிகை மற்றும் தனது பொருட்களை மற்றவர்கள் தொட கூடாது என்று சிறப்பாக சக போட்டியாளர்களின் மனதில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தனது ஆளுமை தனத்தை முயற்சிக்கும் ரேகா