பிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்
விக்னேஷ் (Author) Published Date : Sep 10, 2018 17:53 ISTபொழுதுபோக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. நேற்று ஏவிக்சன் மூலமாக சென்றாயன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் அவருக்கும் பிக்பாஸ் வீட்டிற்கும் சம்மதமே இல்லாமல் போன்று தான் இதுவரை திரிந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவர் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் வீட்டில் 7பேராக குறைந்துள்ளனர். இவர் வெளியே வந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரே ஒரு ஆணாக பாலாஜி மட்டும் சோலோவாக திரிந்து கொண்டிருக்கிறார்.
அநேகமாக இவரும் இந்த வாரம் வெளியே வர அதிகபட்ச வாய்ப்புள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சென்றாயன் அவருடைய சுவாரிஸ்யமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவருடைய அனுபவம் குறித்து கூறுகையில் 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது ஒரு பக்கம் சந்தோசமாளித்தாலும், மறு பக்கம் கவலை அளிக்கிறது. இத்தனை நாள் இருந்து மீதமுள்ள நாட்களை பயணிக்க முடியவில்லை என வருத்தமாக உள்ளது.
இத்தனை நாள் தங்கச்சி மாதிரி பழகிய ஐஸ்வர்யா தான் ஜெயிக்கணும்னு ஒரு தப்பு பண்ணாங்க. அந்த விஷத்தை மறுபடியும் மறுபடியும் பேசி அவங்கள புண்படுத்த கூடாது என நான் பேசல. மும்தாஜுக்கும் எனக்கும் மொழி பிரச்சனை இருந்தது. அவர் பேசும்போது கோர்வையாக இந்தி, ஆங்கிலம் என மாத்தி மாத்தி பேசுவார். அதனால் அவர் சொல்வது மண்டையில் ஏறாது. நான் இருந்தவரை விருந்தினர்களாக கார்த்தி, சூரி, பாண்டியராஜ், ஆர்யா ஆகியோர் வரும்போது எனக்கு இன்னும் பிக்பாஸ் வீட்டில் விளையாடனும் என்ற ஆசை அதிகமானது.
என் தங்கம் என்ன பாத்து, நீ அப்பா வாகிட்டன்னு சொன்னவுடனே நான் நானாகவே இல்ல. அதுக்காக என்னை விட என் தங்கம் அதிகமா கஷ்டப்பட்டிருக்காங்க. இத்தனை நாளா மத்தவங்க குத்தி காட்டிய அந்த வார்த்தை எல்லாம் தங்கம் சொன்ன ஒரு வார்த்தையிலே எல்லாமே மாறிப்போச்சு. ஐஜினிக் ஐஜினிக்னு சொல்றாங்க எனக்கு வெளியே வந்த பிறகும் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியல.
அங்க யாருமே ஐஜினிக் கிடையாது. பைனலிஸ்ட் பொறுத்தவரைக்கும் எனக்கு தெரிஞ்சு ரித்விகா தான். அவங்க நல்லா விளையாடுறாங்க. எந்த இடத்தில எப்படியோ அப்படி நடந்துக்கிறாங்க..அவங்க அவங்களாவே இருக்காங்க.அவங்களுக்கு கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கு. நான் என் அப்பா, அம்மாவ பாக்க போறேன்.நன்றி வணக்கம் .' என்று அவர் தெரிவித்துள்ளார்.