Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன ஒத்த வார்த்தையில் திட்டிய மஹத்

சூப்பர்ஹீரோக்கள்Vsசூப்பர்வில்லன்கள் டாஸ்கில் ராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன அந்த வார்த்தையில் மஹத் திட்டியுள்ளார்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 67வது நாளில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் பெயர் சூப்பர் ஹீரோக்கள்Vsசூப்பர் வில்லன்கள். இந்த டாஸ்கில் சூப்பர் ஹீரோக்களாக பாகுபலி-டேனியல், ராஜமாதா-மும்தாஜ், சிட்டி ரோபோ-தாடி பாலாஜி, நயன்தாரா-யாஷிகா, விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா-ஐஸ்வர்யா ஆகியோர் இடம்பெற்றனர்.

சூப்பர் வில்லன்களாக மகத், ஜனனி, ரித்விகா, சென்ட்ராயன் ஆகியோர் பிரிக்கப்பட்டனர். இந்த டாஸ்கில் சூப்பர் வில்லன்கள் எந்த எல்லைக்கும் போகலாம் என பிக்பாஸ் தெரிவித்தது. ஆனால் சூப்பர் வில்லன்களில் மகத்துக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. இந்த டாஸ்கை பயன்படுத்தி தம்மால் முடிந்தவரை மும்தாஜையும், டேனியலையும் கலாய்த்து வம்புக்கு இழுத்தார்.

அப்போது டேனியை வம்புக்கு இழுக்கும் போது, ராஜாமாதா என்னை காப்பாற்றுங்கள்..என்று டேனி கூற, அதற்கு மகத், ராஜமாதாவா..போடா கோ..கோ..கோ.. என்று அசிங்க படுத்தியுள்ளார். ஆனால் அத்தனை அசிங்கத்தையும் ஏற்றுக்கொண்டு ராஜமாதாவும், பாகுபலியும் சூடு சொரணை இல்லாமல் டாஸ்கில் ஜெயிக்க ஆர்வமுடன் இருந்தனர். இது தவிர இதர சூப்பர் வில்லன்கள் ஜனனி, ரித்விகா, சென்றயான் ஆகியோர் ஹீரோக்களை கோபப்படுத்த முயன்றனர் ஆனால் சூப்பர் ஹீரோக்கள் தான் அவர்களை கலாய்த்து கொண்டிருந்தனர்.

இந்த டாஸ்க் இன்றும் நடைபெற உள்ளது. இந்த சூப்பர் ஹீரோக்களில் ராஜாமதா கூட உருவத்தில் ஏதோ ஒத்து போனது, ஆனா, இந்த பாகுபலி, நயன்தாரா, த்ரிஷா இந்த கேரக்டர்களை தான் ரசிகர்களால சுத்தமாக ஏற்று கொள்ள முடியல. மேலும் இன்று வைல்ட் கார்ட் என்ட்ரியில் மற்றொரு ஜீவன் நுழைய உள்ளது. அந்த ஜீவன் மீதமுள்ள நாட்களில் என்ன மிருகமா..மாறப்போகிறதோ..

ராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன ஒத்த வார்த்தையில் திட்டிய மஹத்