Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜயலட்சுமியிடம் மற்றவர்களை பற்றி விளக்கமாக எச்சரிக்கும் சக போட்டியாளர்கள்

பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்ட்ரியில் இன்று விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். வந்தவுடனே மற்றவர்களை பற்றி எச்சரிக்கின்றனர் சக போட்டியாளர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 68வது நாளை கடந்துள்ளது. தற்போது பிக்பாஸில் இரண்டு நாட்களாக சூப்பர் ஹீரோக்கள்Vsசூப்பர் வில்லன்கள் டாஸ்க் நடந்து கொண்டு வருகிறது. நேற்று சூப்பர் வில்லன்களாக இருந்தவர்கள் இன்று சூப்பர் ஹீரோக்களாகவும், சூப்பர் ஹீரோவாக இருந்தவர்கள் சூப்பர் வில்லன்களாகவும் மாறினர்.

நேற்று மகத் கொடுத்த அலப்பறைகளை பொறுத்து கொண்டு இருந்த சூப்பர் ஹீரோக்களான டேனியல், மும்தாஜ், இன்று சூப்பர் வில்லனாக மாறிய பிறகு பழிதீர்த்து கொள்ளாமல் சாந்தமாக இருந்தனர். ஆனால் நேற்று நயன்தாரா, திரிஷாவாகவும் திரிந்த ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் சூப்பர் வில்லனாக மாறி அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் இருக்கே..சகிக்க முடியவில்லை.

வழக்கம் போல நேற்றைய ப்ரோமோவை பார்த்து விஜயலட்சுமி இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்க வில்லை. இன்று தான் விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். இவர் வீட்டிற்குள் நுழைந்ததும் அவரிடம் மத்த போட்டியாளர்களை பற்றி வத்தி வைக்கின்றனர். பிக்பாஸை பார்த்து வைல்ட் என்ட்ரி மூலம் நுழைந்துள்ள விஜயலட்சுமி மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரிடம் எச்சரிக்கையாக விலகியே வருகிறார். இந்த புதுவரவின் கதாபாத்திரத்தை சற்று பொறுத்திருந்து பாப்போம்.

விஜயலட்சுமியிடம் மற்றவர்களை பற்றி விளக்கமாக எச்சரிக்கும் சக போட்டியாளர்கள்