80 நாட்களை கடந்தும் ஐஸ்வர்யா கேரக்டரை புரிந்து கொள்ளாத ஹவுஸ் மெட்ஸ்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Sep 05, 2018 12:25 ISTபொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 80வது நாள் நேற்று புது டாஸ்க்குடன் நிறைவடைந்தது. இந்த வார எலிமினேஷனுக்கு மும்தாஜ், ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, சென்ட்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்த வார ஏவிக்சன் நாமினேஷனில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் நாமினேட் செய்யப்பட்டவர் ஹவுஸ் மேட்ஸை சமாதானப்படுத்தி அவரை ஒரு டாஸ்க் செய்ய வைக்க வேண்டும். இந்த டாஸ்க் முதலாவதாக ஐஸ்வர்யாவுக்கு போன் மூலம் கொடுக்கப்பட்டது.
இதன்படி சென்றாயனை சிவப்பு கலரை முடியில் பூசி கொள்ள வேண்டும். ஒரு டாஸ்க் என்றாலே ஹவுஸ் மெட்ஸ் என்ன செய்யவார்கள் என்று நமக்கு தான் தெரியுமே. எப்படியாவது இந்த டாஸ்கில் வெல்ல முயற்சி செய்வார்கள். அதற்கேற்ப ஐஸ்வர்யாவுக்கு முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கை முதலில் தவறாக புரிந்து கொண்டு சென்றாயனிடம் இதை செய்தால் நீங்கள் வெளியேறுவீர்கள் என ஐஸ்வர்யா சமாதானப்படுத்தினார்.
சமாதானப்படுத்தி அவருக்கு முடியில் கலரும் பூசி விட்டார். ஐஸ்வர்யாவுக்கு பிறகு ஜனனிக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாலாஜியை மொட்டை அடிக்க சமாதானம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஐஸ்வர்யா செய்ததை தானும் செய்யக்கூடாது என்று புரிந்து கொண்டு பாலாஜியிடம் நீங்கள் மொட்டை அடித்தாலும் சரி, இல்லனாலும் பரவாயில்ல என தெரிவித்தார்.
ஆனால் ஐஸ்வர்யா பொய் சொல்றார் என தெரிந்து கொண்டு இதை பொறுக்க முடியாமல் எல்லாருமே ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்தனர். சென்றாயனுமே இதை கூட புரிந்து கொள்ள முடியாத என சண்டை போட்டனர். இதில் உண்மை என்ன வென்றால் பாவம் அந்த ஐஸ்வர்யாவை 80 நாள் பழகியுமே ஒருத்தரும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான். ஐஸ்வர்யா ஏன் அப்படி செய்தார் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருந்தாலே இந்த சண்டை வந்திருக்காது. அவர் ஒரு டாஸ்க்கை எப்படி எடுத்து கொள்வார் என்பது நமக்கு தெரியும்.
இது ஒரு டாஸ்க், இந்த டாஸ்க் 'சென்றாயனை சமாதானப்படுத்தி முடிக்கு கலர் அடிக்க வேண்டும்' என்பது மட்டுமே அவர் மனதில் இருந்துள்ளது. அதை அப்படியே அவரும் செய்து விட்டார். இந்த டாஸ்க் மற்றவர் நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை காட்டுவதற்காக என்பது அவருக்கு தெரியாது. இதை புரிந்து கொள்ளாமல் எல்லோருமே அவரிடம் சண்டை போட்டனர்.
சண்டை என்றாலே ஐஸ்வர்யா பத்ரகாளி மாதிரி மாறிவிடுவார். இதனால் அவரும் மற்றவர் நம்மிடம் சண்டைக்கு வரும் ஏட்டிக்கு போட்டியாக பேசியுள்ளார். இதில் அநியாயம் என்ன வென்றால் கூடவே இருந்து குழு பறிப்பது யாஷிகாவை இன்னும் தோழியாக ஐஸ்வர்யா நினைத்து வருவது தான். 80 நாட்களாக ஒரே வீட்டில் இருந்தும் ஐஸ்வர்யாவை ஒருத்தரும் புரிந்து கொள்ளவில்லை என்பது பரிதாபமாக உள்ளது.