Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஐஸ்வர்யாவை கதற விடும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்

பிக்பாஸ் 2வில் மும்தாஜ் இல்லை என்பதால் அழ வைக்க வேறு யாரும் கிடைக்கவில்லை என ஐஸ்வர்யாவை கதற வைக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 94வது நாளை கடந்துள்ளது. நேற்று மதிப்பெண்களுக்காக பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை பாரபட்சம் பார்க்காமல் செய்து முடித்தனர். இதில் ஐஸ்வர்யாவை மட்டும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அனைவருமே கதற விட்டனர். நேற்று நடந்த இரண்டு டாஸ்க்கில் பாலாஜிக்கு ஒரு மதிப்பெண்கள் கூட கிடைக்கவில்லை. அவரை ஏதோ லேடிஸ் ஹாஸ்டலுக்கு பாதுகாவலர் போன்று நினைத்து பிக்பாஸும் அவரை 12வது வாரம் வரை இழுத்து வந்தது.

ஆனால் இந்த வாரம் போட்டி கடுமையாக இருப்பதால் அவரை வெளியேற்றி விடலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர் வெளியே வந்துவிட்டால் பெண்கள் மட்டுமே பைனலுக்கு சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும். இன்றும் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் அவரவர் தகுதி என்னவென்று அவர்களாகவே தேர்வு செய்ய வேண்டும்.

இதில் முதல் இடத்திற்காக யாஷிகா, ஜனனி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர யாருமே ஐஸ்வர்யாவை கண்டுக்காமல் உள்ளதால் அவரே கடைசி இடத்தில் அமர்ந்து கொண்டு நான் கடைசி தான் என்று புலம்புகிறார். இந்த புது டாஸ்க்கால் எப்படியும் இன்றைய நிகழ்ச்சி கலவரமாக மாறும் இதனால் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யாவை கதற விடும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்