Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெங்கட் பிரபு சிம்புதேவன் கூட்டணியில் இணைந்துள்ள பிக்பாஸ் விஜயலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜயலட்சுமி இணைந்துள்ளார்.

நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளரான விஜயலட்சுமியை 'சென்னை 28' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, பிரியாணி மற்றும் சென்னை 28 II படங்களிலும் விஜயலட்சுமி நடித்திருந்தார். பின்னர் சீரியலில் கவனம் செலுத்தி ஆரம்பித்த விஜயலட்சுமி 'நாயகி' சீரியலில் 144 எபிசோடில் நடித்திருந்தார்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. தற்போது விஜயலட்சுமிக்கும் பட வாய்ப்புகள் ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு 'பார்ட்டி' படத்திற்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாக உள்ள மல்டி ஸ்டாரர் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் கூட்டணி நடிகர்களான ஜெய், வைபவ், பிரேம்ஜி, சிவா போன்ற பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கான பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

வெங்கட் பிரபு சிம்புதேவன் கூட்டணியில் இணைந்துள்ள பிக்பாஸ் விஜயலட்சுமி