காலா படக்குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வேலுசாமி (Author) Published Date : Jan 25, 2018 09:58 ISTபொழுதுபோக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி' படத்தை தொடர்ந்து 'காலா' படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தையும் இரண்டாவது முறையாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது குரலை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த, இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் ராஜசேகரன் என்பவர், 'காலா என்கிற கரிகாலன்' என்ற படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்துள்ளார். 'காலா என்கிற கரிகாலன்' என்ற தலைப்பை 1996-ஆம் ஆண்டு தாம் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் முறையான அனுமதியில்லாமல் 'காலா' படத்தை தயாரித்து வருவதாகவும் ராஜசேகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 'காலா' படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.