Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியூரில் இருப்பதால் கலைஞர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய சீயான் விக்ரம்

கலைஞரின் மறைவிற்கு சீயான் விக்ரம் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாததால் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஷால், நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவரின் மறைவை ஒட்டி சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகமே மையான அமைதியாக மறைந்த கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சியான் விக்ரமும் தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

அவரால் நேரில் வந்து இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை முதலமைச்சர் என பன்முக ஆளுமை கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்த அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் உள்ளேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று அவர் இரங்கல் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

வெளியூரில் இருப்பதால் கலைஞர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய சீயான் விக்ரம்