Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ

sketch movie promo video

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படம் 'துருவநட்சத்திரம்'. இந்த படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் லோக்கல் கெட்டப்பில் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். இந்த ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்துவருகின்றனர். இவர்களுடன் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர். 

பொங்கல் திருநாளுக்கு விருந்தளிக்க வரும் இப்படத்தில் தமன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்காக சீயான் விக்ரம் டப்பிங்கில் புது வித  குரலை கையாண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் இருந்து முன்னதாகவே வெளிவந்த போஸ்டர், டீசர், கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே' என மூன்று சிங்கிள் வீடியோ போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் 15 நொடி ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் விக்ரமின் 'வரமாட்டேன்னு நெனச்சியா இல்ல வர முடியாதுனு நெனச்சியா' என்ற வசனத்திற்கு ரசிகர்கள் வெகுவான வரவேற்புடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் யு /ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தினை வருகிற பொங்கல் தினத்தினை முன்னிட்டு திரைக்குவர உள்ளது. மேலும் இந்த படத்தின் 'தாடிக்காரா' பாடலின் லிரிக்கல் வீடியோ ஒன்றை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ