Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விக்ரமின் சாமி ஸ்கொயர் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் ஹரியின் சாமி ஸ்கொயர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாமி ஸ்கொயர்'. இயக்குனர் ஹரியின் 17வது படமான இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். ஆறு, சிங்கம், சிங்கம் 2, படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக 'சாமி ஸ்கொயர்' மூலம் ஹரி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விக்ரமின் சாமி ஸ்கொயர் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு