காமெடி நடிகர் ஜெகனின் 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'
ராசு (Author) Published Date : Dec 19, 2017 16:49 ISTபொழுதுபோக்கு
விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன், சந்தானம், மா.கா.பா.ஆனந்த் போன்றவர்கள் திரையுலகில் நடிப்பதோடு சிலர் முன்னனி நடிகராகவும் உருவெடுத்துள்ளனர். இந்த வரிசையில் தற்பொழுது ஜெகன் பங்குகொண்டுள்ளார். விஜய் டிவி தொலைக்காட்சியில் 'மனிதன் பாதி மிருகம் பாதி 'நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று தற்பொழுது 'எஸ் ஆர் நோ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஜெகன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். 'அயன்' படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் ஜெகன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஜெகன் களமிறங்கவுள்ளார். புதுமுக இயக்குனர் முருகலிங்கம் இயக்கும் இப்படத்திற்கு 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' என்று தலைப்பினை வைத்துள்ளனர். காமெடிகள் நிறைந்து காணப்படும் இப்படத்தில் நாயகியாக ரஹானா என்ற புதுமுகம் அறிமுகமாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடமனா வில்லன் கேரக்டரில் பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்க இருக்கிறார்.
படத்தின் சில கருத்துக்களை இயக்குனர் கூறியது : கிராமத்தது தொடராக துவங்கவிருக்கும் இப்படத்தில் பசு மாடு ஒன்று காணாமல் போக, இதனை காவல் உதவி ஆய்வாளரான ஜெகனிடம் புகார் அளிக்கின்றனர். இந்த மாட்டை கண்டுபிடுத்து தரும் போது ஏற்படும் காமெடி நிகழ்ச்சிகளே படத்தின் மையக்கருத்து என்று கூறினார்.