பத்மாவதி படத்திற்கு தொடரும் மிரட்டல்கள்
யசோதா (Author) Published Date : Nov 17, 2017 10:30 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் 'பத்மாவதி'. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே 'பத்மினி ' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தூர் ராணி பத்மினி வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்புகள் வெடித்து வருகிறது. பத்மாவதி படப்பிடிப்பின் போதும் பொருட்களை தீவைத்தும் பணியாட்களை காயப்படுத்தியும் வந்தனர். படம் வெளியானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வந்தனர். சமீபத்தில் 'பத்மாவதி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஷாஹித் கபூர் " படம் வெளியாவதற்கு முன்பே கருது சொல்லாமல் படத்தை வெளிவிட வாய்ப்பு தாருங்கள் " என கேட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராஜ்புத் அமைப்பின் தலைவர் மகில்பால் சிங் மாக்ரனா பேசும்போது"ராஜ்புத் வம்ச வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது. அதை கருப்பு மையால் அழிக்க விடமாட்டோம். ராஜ்புத் வம்சத்தினர் பொதுவாக பெண்களுக்கு எதிராக கை உயர்த்துவது இல்லை. ஆனால் இந்த படம் வெளியானால் ராமாயணத்தில் லட்சுமணன் சூர்ப்பனையின் மூக்கை அறுத்தது போல தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம்." என மிரட்டுதல் விடுத்துள்ளார். மேலும் சர்வ் பிராமின் மகா சபா என்ற அமைப்பு தணிக்கை வாரியத்துக்கு படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.