Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நான், எமன் படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனி

dhoni acting on jeeva shankar direction

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து 'எம் எஸ் தோனி' என்ற படம் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் 'தோனி..தோனி..' என்ற கரகோஷம் இருந்து கொண்டே இருக்கும். ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ள போது இவரை நடிப்பதற்கு வரவேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டனர். அனைவருக்கும் 'NO' சொல்லிவிடுவார். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியின் நான், எமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த படத்திற்கு இவருடைய கதாபாத்திரம் ஆக்சனா, காதலா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் தரப்பில் இருந்து வேறொரு பதில் அளித்துள்ளனர். அதில் "இந்த படம் ஒரு விளையாட்டு பின்னணி கொண்ட படம். இந்திய இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வருவதற்கு 'ரன் ஆடம்' என்ற செயலி உருவாக்கப்பட்டது. அதற்கான குறும்படத்தில் தான் நடிக்க உள்ளார்" என்று தெரிவித்துள்ளனர். தோனி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே இருந்தாலும் இவர் நடிக்கவுள்ள இந்த குறும்படத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நான், எமன் படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனி