Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அக்ஷய் குமாரின் பட்மன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்

dhanush acting in akshaykumar padman movie tamil remake

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் 'பட்மன்' படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஆர் பல்கி இயக்கியுள்ளார். இந்த படம் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் அக்ஷய் குமாருடன் சோனம் கபூர், ராதிகா அப்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அமிதாப்பச்சன்நடித்துள்ளார் . இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தற்போதுவரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 'The Sanitary Man of Sacred Land' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை முன்னாள் நடிகை மற்றும் எழுத்தாளரான டிவிங்கில் கண்ணா எழுதியுள்ளார். இந்த படத்தையும் டிவிங்கில் கண்ணா, SPE பிலிம்ஸ் இந்தியா, கேஏ என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை கதையை முதலில் தமிழில் தானே எடுத்திருக்க வேண்டும். தமிழ் சினிமா இவர்களையெல்லாம் கவனிக்க ஏன் மறுத்துவிட்டது என்று சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை கதை தமிழில் உருவாக உள்ளது.

அக்ஷய் குமாரின் பட்மன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்