Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மேயாத மான் இயக்குனரிடம் இணையும் பிரபல நடிகர்

dhanush new movie

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தினை தொடர்ந்து வட சென்னை, தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர், மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிட படாத படத்தில் நடிப்பதினை தொடர்ந்து தேனாண்டாள் தயாரிப்பில் நடிக்க இருக்கும் தனுஷ் தற்பொழுது மற்றொரு படத்திற்கு கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.   

வைபவ் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த 'மேயாத மான்' படத்திற்கு ரசிகர்கள் மற்றும்  விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்ததோடு பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நடிகர்  தனுஷ் தனது ட்விட்டர் மூலம் பாராட்டினை தெரிவித்திருந்தார். இந்த படத்தில் வரும் கதை, வசனம், பாடல் போன்றவை நல்ல விதத்தில் எடுக்கப்பட்டிருந்ததின் காரணத்தினால் தனுஷுக்கு இந்த இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டதாகவும், இதனால் ரத்ன குமார் இயக்கத்தில் எடுக்க இருக்கும் புது படத்தில் தனுஷ் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.      

மேயாத மான் இயக்குனரிடம் இணையும் பிரபல நடிகர்