Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தற்போது வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதற்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

இந்த படம் மூன்று பாகமாக வெளிவரவுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பொறுத்து இதர பாகங்களை உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷ் மற்றும் அல்லிராஜா சுபாஷ்கரன் ஆகியோர் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிசோர், சுப்ரமணியம் சிவா, பவன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கும் வேல் ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. 

வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்