Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலரை வெளியிட உள்ள தனுஷ்

வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலரை வெளியிட உள்ள தனுஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் சர்கார், சண்டக்கோழி 2 போன்ற 4 படங்கள் வெளியாகி விட்டது. இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாரி 2' படமும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் 'விஜயா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்துள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு நடிகை வரலட்சுமி நடிப்பில் வெல்வெட் நகரம், கன்னி ராசி, அம்மாயி, பாம்பன், நீயா 2 போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெல்வெட் நகரம்' படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் நாளை 6 மணிக்கு வெளியிட உள்ளார். இந்த படத்தினை மேக்கர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகின்றது. 

வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலரை வெளியிட உள்ள தனுஷ்