ரம்மி இயக்குனரிடம் இணையும் ஜோக்கர், துருவங்கள் 16 பிரபலங்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 09, 2017 20:10 ISTபொழுதுபோக்கு
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து நடித்த ரம்மி படத்திற்கு நல்ல வெற்றி ரசிகர்களிடமிருந்து பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் 'கூட மேல கூட வச்சி' பாடல் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. இந்த வெற்றி படத்தினை கே.பாலக்ரிஷ்ணன் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தினை தொடர்ந்து 'கதாயுதம்' படத்தினை இயக்கவுள்ளார். ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா துறையில் கவனிக்கப்பட்டவராகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவருமான குருசோமசுந்தரம் மற்றும் 'துருவங்கள் 16' படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமானவர் ரகுமான் இந்த இரு நாயகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளனர்.
ரம்மி படத்தினை தயாரித்த ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனமே இந்த புதுவித படத்தினை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளது. நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் புகழ் சுஷ்மா ராஜ் நடிக்கவிருக்கும் இப்படத்தில் காளிவெங்கட், துளசி, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
வாழ்க்கை என்றால் அனைவர்க்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவோடு இருக்கும் இரண்டு பேர் சந்திக்கும் சிக்கல், பிரச்சனை மேலும் கனவு நிறைவேற போராடும் நிகழ்வுகள் கதையின் மையக்கருத்து. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது
.