Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி

இது என்ன மாயம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி புது படத்தில் இணைந்துள்ளது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'லக்ஷ்மி'. நடன புயல் பிரபு தேவா மற்றும் சூப்பர் சிங்கர் முதல் சீசனின் டைட்டில் வின்னரான சிறுமி தித்யா பாண்டே நடிப்பில் நடனத்தை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஎல் விஜய் தனது அடுத்த படத்திற்கு ஜிவி பிரகாஷுடன் இணைந்துள்ளார்.

இது என்ன மாயம் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குனர் ஏஎல் விஜயின் அறிமுக படமான 'கிரீடம்' படத்திலிருந்து மதராசபட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் போன்ற ஏழு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயகனாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் சத்தமே இல்லாமல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்களும் பரவி வருகிறது. இந்த படத்திற்கு 'வாட்ச்மேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படக்குழு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி