Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

லக்ஷ்மி பட டைட்டில் லுக்கை வெளியிட்ட பிரபு தேவா

Actor Prabhu Deva release Lakshmi Movie title look poster

நடிகர் பிரபு தேவா நடிப்பில் இறுதியாக 'குலேபகாவலி' படம் வெளியானது. இதனை தொடர்ந்து பிரபு தேவா நடிப்பில் யங் மங் சங், மெர்குரி, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து பிரபு தேவா 'லக்ஷ்மி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தயாரிப்பில் முன்னதாக சிவலிங்கா, வெற்றிவேல் போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ட்ரிடண்ட் ஆர்ட்ஸின் மூன்றாவது படம் பிரபு தேவா நடிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா நடிக்க உள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க உள்ளார். இவர் முன்னதாக பிரபு தேவா நடிப்பில் வெளியான 'தேவி' படத்தை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக தேவி பட கூட்டணி 'லக்ஷ்மி' படத்தில் இணைந்துள்ளது. இந்த படமும் ஹரர் படமாக உருவாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'கரு'.

இந்த படம் வரும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் பிரபு தேவா வெளியிட்டுள்ளார்.மேலும் இந்நிறுவனம் அப்பா, ஜாக்சன் துரை, கொடி, அச்சம் என்பது மடமையடா, ஜில் ஜங் ஜக், அவள், அறம் போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸின் நான்காவது படமாக 'விக்ரம் வேதா' படத்தின் கன்னட ரீமேக் உருவாக உள்ளது. இந்த படத்தை இந்நிறுவனம் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளனர்.

லக்ஷ்மி பட டைட்டில் லுக்கை வெளியிட்ட பிரபு தேவா