Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆக்சிஜன் படத்தில் மூன்று விதமாக காட்சியளிக்கும் அசோக் செல்வன்

ashok selvan character in oxygen movie

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தற்போது 'ஆக்சிஜன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் என் ராமசாமி மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜோகன் இசையமைக்கிறார். புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது "இந்த படத்தில் பணக்காரன், மிடில் க்ளாஸ், ஏழை போன்ற மூன்று வித சமூகத்தை காண்பித்திருக்கிறேன். இந்த படத்தில் நாயகனான அசோக் நேர்மையான சாதாரண மனிதர். நேர்மையான மனிதர்கள் உலகத்தில் ஆக்சிஜன் போன்றவர்கள். அதனால் தான் இந்த படத்திற்கு 'ஆக்சிஜன்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேர்மையாக வாழும் நாயகனுக்கு  அந்த சமயத்தில் அவருக்கு சில சதிகளால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அசோக்கை மாணவன், குடும்பஸ்தர், முரட்டுத்தனமான மனிதர் போன்ற மூன்று மாறுபட்ட தோற்றங்களில் காண்பித்திருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு 20 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்." என்று தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் படத்தில் மூன்று விதமாக காட்சியளிக்கும் அசோக் செல்வன்