Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் தேவரகொண்டாவின் நோட்டாவில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்

நோட்டா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமாவில் அரிமா நம்பி, இருமுகன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆனந்த் சங்கர். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'நோட்டா' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதலமைச்சராக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து மெஹரீன் பிரிஷ்டா, சத்யராஜ், நாசர், பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர், அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பு, உதவி இயக்குனராக ஏஆர் முருகதாஸிடம் துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் 'நோட்டா' படத்தில் தன்னுடைய குருவை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் சங்கர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் நோட்டாவில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்