ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வரும் பாலாவின் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ராசு (Author) Published Date : Sep 22, 2018 17:06 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'வர்மா'. தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக கொல்கத்தாவை சேர்ந்த மாடலான மேகா என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் துருவ் விக்ரமின் பிறந்த நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழகம் முழுவதும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தையும், வர்மா படத்தையும் வேறுபடுத்தி நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு தள்ளுகின்றனர். துருவ் விக்ரமின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விமர்சனங்களுக்கு ஆளானது வேதனையாக உள்ளது.
ஆனால் இயக்குனர் பாலா படத்திற்கு முதல் முறை அல்ல. இவருடைய அனைத்து படங்களுமே விமர்சனங்களை பெற்று தான் பல விருதுகளை வென்றுள்ளது. இவருடைய படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்தின் நடிப்பும் தான் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனால் இவருடைய வர்மா படத்தின் போஸ்டர் விமர்சனங்களை பெற்று வந்தாலும் தமிழ் சினிமாவில் இவருடைய மற்ற படங்களை போல வர்மா படமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.