புகழேந்தி எனும் நான் படப்பிடிப்பின் போது மயங்கிய இயக்குனர்
வேலுசாமி (Author) Published Date : Jan 22, 2018 14:21 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் மகேந்திரன், தமிழில் பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதிய இவர் 1978-இல் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் 'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து உதிரி பூக்கள், மெட்டி, ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, கை கொடுக்கும் கை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 'உதிரி பூக்கள்' படம் 'புதுமைபித்தனின் சிற்றன்னை' என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இவருடைய இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று படங்களில் நடித்துள்ளார். இவர் சரத்பாபு, சுஹாசினி, சாருஹாசன், அஸ்வினி உள்ளிட்ட நடிகர்களை தன்னுடைய படங்களால் பிரபலமாக்கியவர்.
இயக்குனர் அட்லீ இவரை ஒரு நடிகராக, வில்லனாக விஜய் நடிப்பில் வெளிவந்த 'தெறி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்தது இவர், உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்', அருள்நிதியின் 'புகழேந்தி எனும் நான்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 'புகழேந்தி எனும் நான்' படத்தை இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக அருள்நிதி நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி இணைந்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன், அருள்நிதிக்கு அப்பா கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வந்துள்ளது. அப்போது திடீரென்று இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த படக்குழு அருகிலுள்ள புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவர்கள், அவருக்கு மூச்சு திணறல் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இருதயத்திலும் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து மருத்துவமனையில் இயக்குனர் மகேந்திரனை படத்தின் இயக்குனர் கரு பழனியப்பன் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் "40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் மூச்சுத்திணறலை சீரடைய வைத்த இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு இன்று ஏற்பட்ட மூச்சுத் திணறல் சீரடைந்து நலமுடன் உள்ளார்! சந்திக்க சென்ற என்னிடம் "நாளைக்கு ஷுட்டிங் வைங்க , வந்திடுறேன்" என்று சொல்லிச் சிரித்தார்!..வாழ்க நீ எம்மான்!.." என்று பதிவிட்டுள்ளார்.