Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் மிஸ்கின் சாந்தனு கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலங்கள்

சாந்தனு இயக்குனர் மிஷ்கினுடன் முதல் முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவி, நித்யா மேனன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சாந்தனு நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான படம் 'முப்பரிமாணம்'. இந்த படத்தை தொடர்ந்து சாந்தனு நடிக்க உள்ள அடுத்த பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள லிப்ரா ப்ரொடக்சன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்டார். இயக்குனர் மிஸ்கின் விஷாலின் துப்பறிவாளன், சவரக்கத்தி படத்திற்கு பிறகு தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடிகராக நடித்து வருகிறார். தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் அவர் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பார். இந்த படத்திலும் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை உறுதியானால் இசைப்புயல் முதல்முறையாக மிஸ்கின் படத்திற்கு இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் மிஸ்கின் சாந்தனு கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலங்கள்