Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்

இயக்குனர் ராதா மோகன் இயக்கவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் படத்தின் டைட்டிலை கண்டுபிடிக்க படக்குழு புதிர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிர் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் பெண்புலி காவல் அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்கு திரையுலகம் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா, இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான 'தும்ஹரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் நடித்த ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு பற்றி படக்குழு புதிர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த தலைப்பை கண்டுபிடிக்கும் 10 ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வரப்பட்டு ஒரு நாள் முழுவதும் அங்குள்ள நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இதற்கான குளு,

1. இரு வார்த்தைகள் கொண்ட தலைப்பு.2. ஒரு வார்த்தை ராதாமோகன், ஜோதிகா தொடர்பு உள்ளது.3. மற்றொரு வார்த்தை ஏப்எம் ரேடியோவின் பெயர்.

இந்த புதிர் போட்டி வரும் 20-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு இந்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

READ DETAILS : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform

ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்