Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர்கள் ராம் மற்றும் மிஸ்கின் நடிக்கும் 'சவரக்கத்தி'

savarakathi movie distribution rights

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களை இயக்கிய ராம், தங்க மீன்கள் படத்தின் மூலம் திரையுலக வட்டாரங்களை கவர்ந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பும், இயக்கமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறந்த படம், சிறந்த நடிப்பு போன்ற பல விருதுகளை தட்டி சென்றது. இவர் தற்போது இயக்குனர் மிஸ்கின் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் 'சவரக்கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை இயக்குனர் மிஸ்கின் எழுதியுள்ளார். 

மேலும் இயக்குனர் மிஸ்கின் இந்த படத்தில் வில்லனாக நடித்து லோன்வோல்ப் ப்ரொடக்சன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.  அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்கு உரிமையை பல ஆங்கில படத்தை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன் வாங்கியுள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இயக்குனர்கள் ராம் மற்றும் மிஸ்கின் நடிக்கும் 'சவரக்கத்தி'