Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

எந்திரன் 2 டீசர் தாமதமாவதன் காரணத்தை தெரிவித்த இயக்குனர் சங்கர்

director shankar explains 2 point 0 movie teaser delayed

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் படம் '2.0', இந்த படம் கிட்டத்தட்ட 450 கோடி செலவில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு உலகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த படம் ஏப்ரலில் 14-ஆம் தேதி வெளிவருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த படத்தின் டீசர் இப்பொழுது வரும் எப்போ வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் டீசரை படக்குழு வெளியிடுவதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த நிகழ்ச்சியிலும் படக்குழு வெளியிடவில்லை. ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் தாமதமாவதற்கு காரணத்தை இயக்குனர் சங்கர் தனது டிவிட்டரில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வேலை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அதிகளவு சிஜி (CG - Computer Generated) வேலைகள் இருக்கிறது. அந்த சிஜி வேலைகள் முடிவடைந்தவுடன் டீசரை வெளியிடுவதாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார் 'டாக்டர் ரிச்சர்ட் / கிரௌ மேன் (காகங்களை கட்டுப்படுத்துபவன்)' என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் பாகத்தில் நடித்த 'டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி' கதாபத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகரான சுதன்சு பாண்டே இந்த படத்தில் முதல் பாகத்தில் இறந்த போஹ்ரா கதாபத்திரத்தின் ஜூனியராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன், அதில் உசேன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

எந்திரன் 2 டீசர் தாமதமாவதன் காரணத்தை தெரிவித்த இயக்குனர் சங்கர்