Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை இயக்க உள்ள சிறுத்தை சிவா

விசுவாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இயக்குனர் சிவா, இந்த படத்திற்கு பிறகு வீரம், வேதாளம், விவேகம் என வி என்ற எழுத்தில் தல அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கி உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு தற்போது அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்து 'விசுவாசம்' படத்தை இயக்கி வருகிறார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தல தீபாவளியாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருந்தனர். ஆனால் முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது படக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் தல பொங்கலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு சிவாவின் அடுத்த படத்திற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் இந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தினை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அஜித்திற்கு பிறகு அல்லு அர்ஜுனை வைத்து புதிய ஆக்சன் படம் ஒன்றை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்க உள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை இயக்க உள்ள சிறுத்தை சிவா