வெற்றி தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ வெங்கட் பிரபுவின் பதில்
வேலுசாமி (Author) Published Date : Apr 28, 2018 15:36 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்குனராக 2007-இல் வெளியான 'சென்னை - 600 028' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தன்னுடைய முதல் படத்திலே இளைஞர்களின் பலத்த வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய இயக்கத்தில் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை 28 II போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனரான வெங்கட் பிரபு ஒரு நடிகராக, பாடகராக ஏராளமான படங்களில் தன்னுடைய திறமைக ளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருடைய முதல் படமான 'சென்னை 28' படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று இவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இதில் ஒரு ரசிகர் "வாலி ஐயாவயே ஜாலியா பாட்டு எழுத வெச்ச ஆளு எங்க வெங்கட் அண்ணே" என்று பாராட்டியிருந்தார். இதற்கு மற்றொரு ரசிகர் "மாஸ் படத்தை கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் பண்ணதும் அவர் தான்" என்று கிண்டலடித்து பேசியுள்ளார். இவருக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு "வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் ப்ரோ..எந்த ஒருவன் வெறும் வெற்றியை மட்டும் சந்திச்சிருக்கான் சொல்லுங்க..இது தான் வாழ்க்கை." என்று பதிலளித்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் 2015இல் வெளியான படம் 'மாஸ் என்கிற மாசிலாமணி'. நடிகர் சூர்யா நடிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்தது. இந்த படம் வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் இல்லாமல் போனாலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது. இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் தன்னுடைய பழைய ஸ்டைலில் வருவார் என கேலி செய்தவர்களுக்கு அவருடைய ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.