டிவிட்டரில் நெட்டிசனை திட்டித்தீர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன்
வேலுசாமி (Author) Published Date : Feb 02, 2018 17:16 ISTபொழுதுபோக்கு
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் கடந்த பொங்கலன்று வெளிவந்தது. இந்த படத்திற்கு போட்டியாக நடிகர் விக்ரமின் 'ஸ்கெட்ச்' மற்றும் பிரபு தேவாவின் 'குலேபகாவலி' போன்ற படங்கள் களமிறங்கியது. இந்நிலையில் ஒருவர் டிவிட்டரில் "கடந்த ஜனவரி மாதம் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் பிப்ரவரியில் தமிழ் சினிமா சிறப்பானதாக உயரும்," என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் "இந்த மாதிரியான ஆட்கள் சினிமா துறைக்கு கிடைத்த சாபம். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தாலும் இது போன்ற ஆட்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் அதனை தாழ்த்தி தான் சொல்கின்றனர் (பணத்திற்காக அலுவலகத்திற்கு வரும் இது போன்ற ஆட்கள் இதை தான் செய்வார்கள்). இவன மாதிரி ஆளுங்கள பாத்தாலே வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது..." என பதிலளித்து அந்த டிவிட்டரை நீக்கியுள்ளார்.
பின்னர் "இது போன்ற கிறுக்கர்கள், வெட்டியா ஏதாவது ஹீரோயின் ஒரு பிக்ச்சர் போட்டா..அதுக்கு ஆவ்..வாவ்..ரொம்ப அழகா இருக்கீங்க..சோ சுவீட்..அப்படினு பதிலளிப்பீங்க..அதுக்கு உங்களுக்கு லைக்கும், சில பதிலும் வரும். அதோட நிறுத்திக்கோங்க..உங்ககிட்ட ஒரு படம் எப்படி உருவாகுது..எப்படி வெற்றியடைது.இதற்கெல்லாம் ஒரு ஆதாரமும் கிடையாது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துனால நாங்க சந்தோசமா இருக்கோம்" என்று சூர்யாவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்களுக்கு இது போன்ற கிறுக்கர்களை ஊக்குவிப்பதை இப்போதாவதாவது நிறுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அனைத்து படங்களும் கஷ்டப்பட்டு தான் வருகிறது. ஆனால் அனைத்துமே ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக மட்டுமே. இருக்கிற ஒரு வாழ்க்கையை நியாயமாக வாழுங்கள் என்றும் வேண்டுதல் விடுத்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் கருத்துக்களால் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.