Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், பேட்ட, சீதக்காதி, இடம் பொருள் ஏவல், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் அடுத்த படத்தினை இயக்குனர் விஜய் சந்தர் இயக்க உள்ளார்.

இவருடைய இயக்கத்தில் முன்னதாக சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு முன்பு சிம்புவின் 'வாலு' படத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார். இவர் தன்னுடைய மூன்றாவது படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். இந்த படத்தினை விஜயா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்த ஆண்டில் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்