விவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க
வேலுசாமி (Author) Published Date : Apr 11, 2018 12:57 ISTபொழுதுபோக்கு
தமிழ்நாட்டில் எந்த திசை திரும்பினாலும் விவசாயின் கண்ணீர் குரலும், போராட்ட களமுமாகவே காணப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடே விவாசயிகளுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் இருக்கும்போது ஐபிஎல் எதற்கு என்று மறுபுறம் அதனை தடை செய்யக்கோரியும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
இப்படி தமிழ்நாட்டில் எத்திசை திரும்பினாலும் போராட்டமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. இத்தகைய போராட்டங்களில் அரசியல் சினிமா என அனைத்தும் கலந்து ஒரு குளறுபடியாக விவசாயிகளுக்கு ஆதரவாக பல நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ், நேற்று நடந்த போராட்டத்தில் அரசியல் மட்டுமே நடைபெறுகிறது. போராட்டங்களில் அரசியல் காட்டாதீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த டீவீட்டில் "நேற்று நடந்த போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது . அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் plzzzz ???? வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி !வன்முறையையும்!!வெங்கட் பிரபு சார், நல்லா CSK ரசிங்க, அது உங்கள் உரிமை.ஆனால் விவசாயிங்கள காமெடி பண்ணாதீங்க plzzzz ????????????" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு "சார், சத்தியமா நா, விவசாயிகளை காமெடி பண்ணல!! அந்த மாதிரி கேவலமான எண்ணம் எனக்கு கிடையாது. நா சொல்றது யாருக்கு என்பதை நீங்களே புரிந்து கொள்ளாதது வேதனையாக இருக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் "Okay sir ???? விவசாயம் பண்ண முடியாம ஒடி வந்தவங்கல்ளே நானும் ஒருத்தன்.அந்த வலி.சக சகோதரனும் இப்படியானு நெனச்சேன்.Cinema எப்படி entertainment mediaவோஅதே மாதிரி sportsம், அத நம்ம பாக்க கூடாதுனு சொல்ல முடியாது.அது எனக்கும் புரியுது.நாடகமும் புரியுது. Apadi illaina sorry sir ????????????" என்று அவர் பதிவு செய்துள்ளார்.