Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உருவாகிறது 3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் அப்போ நண்பன் 2

தற்போது இந்தியில் 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அப்போ தமிழில் நண்பன் 2 படம் உருவாகுமா என்று சங்கரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியில் 3 இடியட்ஸ் மற்றும் பிகே போன்ற படங்களை இயக்கியுள்ள முன்னணி இயக்குனரான ராஜ்குமார் இராணி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'சஞ்சு'. சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக ராஜ்குமார் இராணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009இல் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த படம் '3 இடியட்ஸ்'. ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதை அறிந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை தொடக்க நிலையிலே உள்ளது.

'சஞ்சு' படத்தின் முழு பணிகளையும் முடித்த பிறகு '3 இடியட்ஸ்' இரண்டாம் பாகத்தில் இயக்குனர் ராஜ்குமார் இராணி களமிறங்கவுள்ளார். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் தமிழிலும் 'நண்பன்' என்ற தலைப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரது நடிப்பில் தற்போது வரையிலும் நீங்கா இடம் பிடித்துள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்குமாறு ரசிகர்கள் இயக்குனர் சங்கருக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இயக்குனர் சங்கர் தற்போது ரஜினியின் 2.0, இந்தியன் 2 போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு 'நண்பன் 2' படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கல்லூரிகளில் இளைஞர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். 

உருவாகிறது 3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் அப்போ நண்பன் 2