Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் நாகர்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பயங்கர தீ

நடிகர் நாகர்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பயங்கர தீ

நடிகர் நாகர்ஜுனா தமிழ்,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த ஸ்டுடியோஸ் நவீன மயம் கொண்டதாகவும் பல அடுக்கு தலமாகவும் இருக்கும். இந்த ஸ்டுடியோஸில் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், படப்பிடிப்புகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் தீயினால் புகைவர தொடங்கியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்குள் தீ வெகு விரைவாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. 

இதனால் அங்குள்ள மக்களை விரைவாக ஊழியர்கள் வெளியேற்றினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனால் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. மக்களை வெளியேற்றியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட அமைப்பு ஐந்து வருடத்திற்கு முன் 'மனம்' படத்திற்காக 2கோடி செலவில் அமைக்கப்பட்டது. தற்போது இது முழுவதும் எரிந்து விட்டது. இந்த ஸ்டுடியோஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நடிகர் நாகர்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பயங்கர தீ